Friday, October 14, 2011உடவலவ - பனகடுவ பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மெக்சி புரொக்டர் தெரிவித்தார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 32 வயதான இந்திரானி (தாய்), 37 வயதுடைய லலித் (தந்தை), 12 வயதுடைய சிலான் சத்துரங்க (மகன்) மற்றும் 08 வயதுடைய நதீக்கா செவ்வந்தி (மகள்) ஆகியோரே நேற்றிரவு 7.40 அளவில் இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
உடவலவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment