Friday, October 28, 2011சண்டே பத்திரிகையின் பிரதம ஆசிரியரான பிரட்றிகா ஜேன்ஸ் தனக்குக் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மீரிஹானை பொலிஸில் நேற்றிரவு முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார். இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
தனக்கு அனுப்பிய வைக்கப்பட்டுள்ள கடிதம் ஒன்றின் மூலம் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் நேற்றிரவு ஏழு மணியளவில் மீரிஹான பொலிஸில் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் வெள்ளைக் கொடி விவகார வழக்கில் இவர் பிரதான சாட்சியாவார். இந்த வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம் 18 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. இதேவேளை, பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பில் இவரது பத்திரிகையில் வெளியான விடயங்கள் குறித்து சீற்றத்துக்கும் இவர் உட்பட்டுள்ளார்
No comments:
Post a Comment