Monday, October 24, 2011

தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் அமெரிக்க விஜயத்தின்போது ருத்திரகுமாரனைச் சந்திக்காதாம்?

Monday, October 24, 2011
தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் அமெரிக்க விஜயத்தின்போது ருத்திரகுமாரனைச் சந்திக்காதாம்?

தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் அமெரிக்க விஜயத்தின்போது புலிகளின் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமரான ருத்திரகுமாரன் விசுவநாதனைச் சந்திக்கும் திட்டமில்லை எனத் தமிழத் தேசியக் (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.இதேவேளை, கொழும்பிலிருந்து புறப்பட்டுச் செல்லும் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு, அமெரிக்காவில் தங்கியிருக்கும் காலப் பகுதியில் அந்நாட்டு வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளின்டன் உட்பட பல முக்கியஸ்தர்களையும் சந்தித்து இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள், அதற்கான தீர்வின் விரைவான அவசியம் குறித்து விளக்கமளிக்கவுள்ளனர். அமெரிக்காவிலிருந்து பிரித்தானியாவுக்குச் செல்லும் (புலி) கூட்டமைப்பினர் பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் (புலி)தமிழ் சமூகத்தைச் சந்தித்துப் பேசவுள்ளனர்.

இதேவேளை, அமெரிக்கா செல்லும் குழுவில் ரெலோ உறுப்பினர்கள் சேர்க்கப்படாமையையிட்டு அந்த இயக்கம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.அமெரிக்கா செல்லவுள்ள குழுவில் தமிழரசுக் கட்சி மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியவற்றின் பிரதிநிதிகளே சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அந்த இயக்கம் குற்றஞ் சாட்டியுள்ளது.

நாளை அமெரிக்கா புறப்படும் குழுவில் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பைச் சேர்ந்த ஆர்.சம்பந்தன் மாவை சேனாதிராஜா எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

No comments:

Post a Comment