Monday, October 24, 2011
நாட்டில் இனச்சுத்திகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மிகவும் சவால்களுக்கு மத்தியில் ஈட்டப்பட்ட சமாதானத்தை சீர்குலைக்கும் முயற்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
பொரளையில் ஆரம்பத்தில் 68 வீதமான சிங்களவர்கள் வசித்து வந்ததாகவும் தற்போது 40 வீதமான சிங்கள மக்களே பொரளையில் வாழ்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான ஒர் சந்தர்ப்பத்தை அடிப்படையாகக் கொண்டு பொரளையில் சிங்கள இனச் சுத்திகரிப்பு இடம்பெறுவதாக குறிப்பிட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் புலி உறுப்பினர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், சாதாரண பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment