Friday, October 21, 2011

இனங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலம் இலங்கையில் கிடையாது - விமல் வீரவங்ச!

Friday, October 21, 2011
இனங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலம் இலங்கையில் கிடையாது என நிர்மாணத்துறை பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவங்ச வலியுறுத்தியுள்ளார்.

கட்டான, தமின்னகஹவத்த ஜனசெவன வீடமைப்புத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

அப்பாவி தமிழ் மக்களை தொடர்ந்தும் பழைய கொடூரமான நிலைமைக்கு இழுத்துச் செல்ல முயலும் அரசியல் நடவடிக்கையொன்று வுவனியாவில் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் காணிகளை வேறு இன மக்களுக்கு வழங்க வேண்டாம் எனக் கூறி அண்மையில் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டமும் அதில் ஒரு அங்கமாகும் என விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் வடக்கு தெற்கு எங்கிருந்தாலும் சிங்கள மக்களின் காணிகளை, தமிழ் மக்களின் காணிகள் அல்லது முஸ்லீம் மக்களின் இடங்கள் என்று எதுவும் கிடையாது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்துப் பிரதேசங்களும் சிங்கள, தமிழ், முஸ்லீம் உள்ளிட்ட அனைத்து இனங்களையும் சேர்ந்த மக்களுக்கு சொந்தமான அரசாங்கத்தின் காணிகளாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இவை சிங்கள மக்களின் இடங்கள், தமிழ் மக்களின் இடங்கள் அல்லது முஸ்லீம் மக்களின் இடங்கள் என இடங்களுக்கு உரிமை வழங்க முற்பட்டால் அது போன்று தவறு வேறு எதுவும் கிடையாது என அமைச்சர் விமல் வீரவங்ச மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment