Wednesday, October 05, 2011பொலிஸ் அதிகாரிகள் தமது கடமைகளுக்காக துப்பாக்கியைப் பயன்படுத்துவதற்கு எவ்வித தடையும் இல்லை என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
கடமையின் தன்மைக்கு அமைய துப்பாக்கிகளை விநியோகிப்பது மற்றும் பயன்படுத்துவது தொடர்பில் தமது நிலைப்பாட்டிற்கு அமைய செயற்படுமாறு அனைத்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கும், பிராந்தியங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கும், வலயங்களுக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளுக்கும், மாவட்டங்களுக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளுக்கும், தலைமைப் பொலிஸ் இன்ஸ் பெக்டர்கள், மற்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொலிஸ் மா அதிபர் நேற்று கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் வழங்கியுள்ள ஆலோசனைகளுக்கு அமைய அனைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளும் உடனடியாக செயற்பட வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு துப்பாக்கிகளை பயன்படுத்துவது தொடர்பில் ஏதேனும் தடை உள்ளதென தகவல்கள் வெளியாகியிருந்தால் அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலி்ஸ் அத்தியட்சகர் மெக்ஸி புரொக்டர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment