Wednesday, October 5, 2011

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்ன் மாத்தாய் எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை விஜயம்!

Wednesday, October 05, 2011
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்ன் மாத்தாய் எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை செல்ல உள்ளார். அவர் யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் பயணத்தின் போது, ஜனாதிபதி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை அவர் சந்தித்து அரசியல் மற்றும் அரசியல் தீர்வு விடயங்கள் குறித்துப்பேச உள்ளார். வெளிவிவகாரச் செயலராகப் பதவியேற்ற பின்னர் அவர் இலங்கைக்குப் பயணம் செய்வது இதுவே முதற்தடவை.

மாத்தாயின் பயணம் 8ஆம் திகதி ஆரம்பமாகிறது என புதுடில்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சு தரப்புக்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்தியாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி, புனர்வாழ்வுத் திட்டங்கள் குறித்தும் மாத்தாய் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறைச் செயலராக இருந்த நிருபமாராவ் பதவி விலகிச்சென்றதன் பின்னர் அந்தப் பதவியைப் பொறுப்பேற்றவர் ரஞ்சன் மாத்தாய். கொழும்புக்கு அதிகம் பரிச்சயமற்றவர் இவர் என ராஜதந்திர தரப்பினரால் கூறப்படுகிறது.

தனது பயணத்தின்போது யாழ்ப்பாணம் வருவதற்கும் மாத்தாய் திட்டமிட்டிருக்கிறார் என தெரியவருகிறது. இடம்பெயர்ந்த மக்களுக்கு 50,000 வீடுகளை அமைத்துக் கொடுக்கும் இந் தியத் திட்டத்தின் பணிகளைப் பார்வையிடும் நோக்குடன் அவர் இங்கு வருகை தரவுள்ளார். அதேவேளை அவர் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment