Saturday, October 15, 2011
புதிய தேர்தல் முறைமை தொடர்பான உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை அடுத்த இரண்டு மாதங்களில் நிறைவேற்றப் போவதாக அரசாங்கம் குறிப்பிடுகின்றது.
இந்த சட்டமூலம் ஏற்கனவே இரண்டாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் பிரதி அமைச்சர் இந்திக்க குணவர்தன கூறினார்.
சட்டமூலத்தில் ஒரு சில திருத்தங்களை மேற்கொண்டதன் பின்னர் அதனை நிறைவேற்றும் வாய்ப்பு காணப்படுவதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதும் நடைமுறையிலுள்ள விருப்பு வாக்குகளுக்கான போட்டித் தன்மை இல்லாதுபோவதுடன் தொகுதி ரீதியாக தாம் விரும்பிய பிரதிநிதியை தெரிவுசெய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றும் அமைச்சர் குறி்ப்பிடுகிறார்.

No comments:
Post a Comment