Saturday, October 15, 2011

கொரிய தொழில்வாய்ப்பு - பண மோசடி நபர் கைது!

Saturday, October 15, 2011
கொரியாவில் தொழில்வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பேலியகொடை, கிரிபத்கொடை மற்றும் சப்புகஸ்கந்த ஆகிய பிரதேசங்களில் பணமோசடி செய்த ஒருவர் களனி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் பிரகாரம் மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவு உத்தியோகத்தர் குழுவினால் சந்தேநகபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இருபது இலட்ச ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையை சந்தேகநபர் மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் பி​ணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment