Saturday, October 15, 2011
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருமித்த கருத்துடனேயே செயற்படுகின்றது. எனினும், அரசு ஒருமித்த கருத்துடன் செயற்படுகிறதா என்பது சந்தேகமே. கூட்டமைப்புக்குத் தமிழ் மக்கள் வழங்கிய ஆணையையும், சர்வதேசத்தின் எதிர்பார்ப்பையும் கருத்திற்கொண்டு அரசே தீர்வை விரைந்து முன்வைக்கவேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த பேச்சில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருமித்த கருத்துடன் பேசுவதற்கு முன்வரவேண்டும் என நேற்றுமுன்தினம் அலரிமாளிகையில் பத்திரிகை ஆசிரியர்களைச் சந்தித்தபோது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார்.
இது குறித்து கருத்து வெளியிடும் போதே மாவை சேனாதிராஜா இதனை குறிப்பிட்டுள்ளார்.பேச்சில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருமித்த கருத்துடனேயே கலந்துகொள்கிறது. ஆனால், அரசு ஒருமித்த கருத்துடன், நோக்கத்துடன் பங்குகொள்கிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பேச்சில் தமிழ் மக்களின் ஒருமித்த யோசனைகளையே கூட்டமைப்பு அரசிடம் சமர்ப்பித்திருக்கிறது.
எனினும், அரசு அவ்வாறு செயற்படுவதில்லை. ஒவ்வொரு கலந்துரையாடலின் போதும் ஏதாவது ஒரு காரணத்தைச் சுட்டிக்காட்டி, திகதிகளை இழுத்தடிக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யோசனைகளைச் சமர்ப்பித்தபோது அவற்றை நிராகரிப்பதாகக் கூறிய அரசு, காலம் தாழ்த்தியது. தொடர்ந்து வந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலைச் சுட்டிக்காட்டி பேச்சை ஒத்திவைத்தது. இப்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருமித்த கருத்துடன் பேச்சு நடத்த முன்வரவேண்டும் என்ற காரணத்தை அரசு கூறியுள்ளது.பேச்சில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பங்கேற்கவேண்டும் என இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் என்பன வலியுறுத்தி வருகின்றன.
தமிழ் மக்களும் கடந்த தேர்தலின்போது அதனையே எடுத்துக்காட்டினர். எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆணையைக் கருத்திற்கொண்டு, இனிமேலும் தீர்வை இழுத்தடிக்காது தனது திட்டத்தை அரசு முன்வைக்கவேண்டும். தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment