Sunday, October 09, 2011
ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதி நிரந்தரப் பிரதிநிதி சவேந்திர சில்வாவிற்கு இராஜதந்திர வரப்பிரசாதங்கள் காணப்படுவதாக அமெரிக்கா அறிவிக்கவுள்ளது.
மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராக அமெரிக்க நியூயோர்க் மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
புலிகளின் கிழக்கு இராணுவத் தளபதி ரமேஷின் மனைவியினால், சவேந்திரவிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எனினும், 1961ம் ஆண்டு வியன்னா பிரகடனத்தின் அடிப்படையில் சவேந்திர சில்வாவிற்கு இராஜதந்திர வரப்பிரசாதம் காணப்படுவதாகவும் இதனால் அவருக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனை அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் உறுதி செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
முதலில வழக்கு விசாரணைகளை எதிர்நோக்கப் போவதாகத் தெரிவித்த சவேந்திர தற்போது, இராஜதந்திர வரப்பிரசாதங்களை பயன்படுத்தப் போவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சவேந்திரவின் சட்டத்தரணிகள் ராஜதந்திர வரப்பிரசாதம் குறித்து நீதிமன்றில் அறிவிக்கவுள்ளனர்.
அமெரிக்க நீதிமன்றில் சவேந்திரவிற்கு எதிராக அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 14ம் திகதிக்கு முன்னதாக அதற்கு பதிலளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
சவேந்திராவிற்கு இராஜதந்திர வரப்பிரசாதங்கள் காணப்படுவதாகவும், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் எழுத்து மூலம் விரைவில் உறுதிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment