Sunday, October 09, 2011
மத்திய அரசின் வெளியுறவுச்செயலாளர் ரஞ்சன் மத்தாய் 3 நாள் பயணமாக இலங்கை செல்லும் வழியில் நேற்று மாலை சென்னை வந்த அவர், கோட்டையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்துப்பேசினார். இந்த சந்திப்பு அரை மணி நேரம் நீடித்தது.
அப்போது இருவரும் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் மற்றும் இலங்கை தமிழர் குடிபெயர்வு பிரச்சினை குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்கள். இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வெளியுறவுச்செயலாளர் ரஞ்சன் மாத்தாயுடனான சந்திப்பின்போது முதல்-அமைச்சர் ஜெயலலிதா புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் கடந்த 5 மாதங்களாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதல் சம்பவங்களை தொகுத்து எடுத்துரைத்தார்.
கடந்த ஜுன் மாதம் 2-ந் தேதி அன்று இலங்கை கடல் பகுதியில் மீன்பிடித்ததாக கூறி 4 மீனவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள் என்றும், அதுபோன்று 20-ந்தேதி 23 மீனவர்களை பிடித்து 5விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர் என்றும், ஜுலை 4-ந்தேதி நாட்டுப்படகில் மீன்பிடித்து கொண்டிருந்த 14 மீனவர்களை பிடித்தனர் என்றும் கூறினார்.
பாக்ஜலசந்தி பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினர் பிடித்து துன்புறுத்திய பல்வேறு சம்பவங்களையும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா நினைவுகூர்ந்தார். இந்த ஆண்டு கடந்த மே மாதம் தொடங்கி இதுவரை இதுபோன்று 14 சம்பவங்கள் நடந்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதலை தமிழக மக்கள் என்று பார்க்காமல் இந்திய குடிமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலாக பார்க்க வேண்டும். தமிழக மீனவர்கள் மீதான ஆக்ரோஷமான தாக்குதலை இந்தியாவுக்கு எதிரான தாக்குதலாக கருத வேண்டும். அதுமட்டுமின்றி தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை, பாகிஸ்தான், சீன எல்லையில் இந்திய ராணுவத்தினர் மீது அந்த நாடுகளின் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தும் சம்பவத்தை போன்று கருத வேண்டும்.
மேலும், இந்த பிரச்சினையை தமிழகத்தின் தனிப்பட்ட பிரச்சினையாக பார்க்காமல் தேசிய பிரச்சினையாக பார்க்க வேண்டும். இந்த தாக்குதல் சம்பவங்கள் பெரும்பாலும் ராமநாதபுரம் மற்றும் நாகப்பட்டினமë மாவட்ட கடலோர பகுதிகளில்தான் நடக்கின்றன. இலங்கை கடற்படை.யினரும், இலங்கை மீனவர்களும் தமிழக மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களையும், பிடித்துவைத்துள்ள மீன்களையும் பறித்து கொள்கிறார்கள்.
இலங்கை கடற்படையினர் இலங்கைக்கு அப்பால் உள்ள கடல்பகுதியில் உன்னிப்பாக கண்காணித்து அந்த பகுதியில் வரும் படகுகளை குறிவைத்து தாக்குகிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் இலங்கை கடற்படைக்கு தெரிந்தே நடக்கின்றன என்றும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார். மேலும், இலங்கை மீனவர்கள் என்ற போர்வையில் தமிழக மீனவர்களை தாக்கி வருவது இலங்கை கடற்படையினர்தான் என்றும் அவர் கூறினார்.
நீண்ட தூரம் செல்ல தேவைப்படும் டீசலை எடுத்துச்செல்ல முடியாத சிறிய படகுகளில்கூட இலங்கை கடற்படையினர் வந்து தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது முக்கியமான விஷயம் ஆகும். கச்சத்தீவை சுற்றியுள்ள பகுதிகளில் மீன்பிடிக்கும் பாரம்பரிய உரிமைகளை அனுபவிக்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும்.
வெளியுறவுத்துறை செயலாளர் தனது இலங்கை பயணத்தின்போது இந்த பிரச்சினைகளை எல்லாம் இலங்கை அரசிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று முதல்- அமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தினார். மேலும், இலங்கையில் முகாம்களில் வாழும் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வழிவகை செய்யுமாறு இலங்கை ஜனாதிபதி மற்றும் இலங்கை அரசிடம் வலியுறுத்துமாறும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மத்தாயிடம் கேட்டுக்கொண்டார்.
இந்த சந்திப்பின்போது வெளியுறவுத்துறை இணைச்செயலர் எச்.வி.சிரிங்லா, வெளியுறவுத்துறை செயலாளர் அலுவலக இயக்குனர் சஞ்சீவ் சிங்லா, தமிழக அரசின் தலைமைச் செயலர் தேபேந்திரநாத் சாரங்கி ஆகியோர் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:
Post a Comment