Sunday, October 09, 2011அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 16 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். திருகோணமலை, சம்பூர் அதிஉயர் பாதுகாப்பு வலயக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்களுடன் ஆறு மீன்பிடிப் படகுகளும் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் திருகோணமலை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment