Saturday, October 15, 2011
மூன்று கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா நகரசபை மைதானத்தில் எதிர்வரும் 17ம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்குமாறு அனைவருக்கும் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. திங்கட்கிழமை காலை 7மணிமுதல் மாலை 4மணிவரை இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது.
இது குறித்து தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு துண்டுப் பிரசுரங்களையும் வெளியிட்டுள்ளது. அதில்,
1. முல்லைத்தீவு மாவட்டத்தில் எல்லைக்களை மாற்றி வெலிஓயா எனும் புதிய பிரதேச செயலகத்தை உருவாக்குவதன் மூலம் அம் மாவட்டத்திலுள்ள இன விகிதாசாரத்தை மாற்றி இனங்களுக்கிடையிலான கசப்புணர்வையும், அமைதி இன்மையையும் ஏற்படுத்தும் செயற்பாட்டை உடன் நிறுத்தவும்.
2. வடகிழக்கு மாகாணங்களில் போரினால் சின்னாபின்னமாக்கப்பட்டு உறவுகளையும், சொத்துக்களையும் இழந்துநிற்கும் நிலையில் காணிப்பதிவு என்னும் போர்வையில் அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட மோசடியான நில அபகரிப்பு செயற்பாடுகளை உடன் நிறுத்தவும். 3. வடக்கு கிழக்கு மாகாணங்களில் இலட்சக்கணக்கான தமிழ்பேசும் (அரச ஊழியர்கள் உட்பட) சிறுபான்மை இன மக்கள், காணி, வீடு இன்றி நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் வேளையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் படையினரது குடியேற்றத்திட்டம் மற்றும் பெரும்பான்மை இன மக்களை குடியமர்த்துவதன் ஊடாக ஏற்படும் இன ஒற்றுமையை சீர்குலைக்கும் செயற்பாட்டை உடன் நிறுத்தவும். இவ்வாறான எமது மக்களின் அடிப்படை வாழ்வுரிமையை அழிக்கும் செயற்பாடுகளைக் கண்டித்து தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு நடாத்தும் இம் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,

No comments:
Post a Comment