Saturday, October 15, 2011
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றியீட்டிய வேட்பாளர்களின் சொத்துகள் மற்றும் உடைமைகள் தொடர்பான விபரங்களை சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம், கால எல்லையை நீடிக்குமாறு விடுக்கப்பட்ட கோரி்க்கையை அடுத்து மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இன்றுடன் முடிவடையவிருந்த கால அவகாசம் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் டபிள்யூ.பீ.சுமனசிறி குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தின் கீழ், வேட்பாளர்களின் சொத்துகள் மற்றும் உடைமைகள் தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்வது கட்டாயமாகும் எனவும். இதற்கமைய சொத்துகள் மற்றும் உடைமைகள் குறித்த விடயங்களை மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டுமெனவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment