Monday, October 03, 2011இயற்கை அனர்த்த பேரழிவுகள் மற்றும் சமூக பொருளாதார ஈடேற்றத்தின் பொருட்டு ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு கடனுதவி வழங்க முன்வந்துள்ளது...
இதன்போது, புனரமைப்பு திட்டங்களுக்காக 9 ஆயிரத்து 940 மில்லியன் ரூபா கடனுதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.
சமூக பொருளாதார நடவடிக்கைகளை கட்டியெழுப்பவும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்கள் மீண்டும் அவ்வாறான பாதிப்புகளுக்கு உள்ளாகாது பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் இந்த கடனுதவித் தொகை பயன்படுத்தப்படவுள்ளது.
2010ம் ஆண்டு டிசம்பர் தொடக்கம் 2011ம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை நாட்டில் நிலவிய அசாதாரண காலநிலை காரணமாக வடமத்திய, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மண்சரிவு, வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்கள் இடம்பெற்றன
இதன்போது ஏற்பட்ட இழப்புகள் காரணமாக சமூக பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
இவ்வாறு வழங்கப்படும் கடனுதவிக்கு வருடம் ஒன்றுக்கு சலுகை அடிப்படையில் 0.01 சதவீத வரி அறவிடப்படும் எனவும் 10 வருட சலுகைக்காலம் உட்பட்ட 40 வருடங்களில் கடன் திருப்பி செலுத்தப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment