Monday, October 3, 2011

சரத் பொன்சேகாவிற்கு ஆதரவான படைத்தரப்பினர் மீது அரசாங்கம் அடக்குமுறைகளை பிரயோகித்தது – விக்கிலீக்ஸ்!

Monday, October 03, 2011
சரத் பொன்சேகாவிற்கு ஆதரவான படைத்தரப்பினர் மீது அரசாங்கம் அடக்குமுறைகளை பிரயோகித்தது – விக்கிலீக்ஸ்

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாக செயற்பட்ட படையதிகாரிகள் மீது அரசாங்கம் அடக்குமுறைகளை பிரயோகித்தாக அமெரிக்கத் தூதுவர் பெட்ரிசியா புட்டீனாஸ் தெரிவித்துள்ளார் என விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கத் தூதுவருக்கும் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கும் இடையிலான தொடர்பாடலின் போது புட்டீனாஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2010ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இந்தத் தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் படைத்தரப்பின் முக்கிய பதவிகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.

இடமாற்றங்கள், பதவி உயர்வுகள், கட்டயா ஓய்வு என பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், சரத் பொன்சேகாவினால் நீண்ட காலமாக இடமாற்றம் வழங்கப்படாதவர்களுக்கும், தேர்தல் சட்டங்களினாலும் சில மாற்றங்களை ஏற்படுத்த முடியாமல் இருந்ததாக சிரேஸ்ட இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு ஆதரவளிக்காத மற்றும் தேர்தல் சட்டங்களை உரிய முறையில் முன்னெடுத்த 150 காவல்துறை உத்தியோகத்தர்கள் தேர்தலின் பின்னர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மாற்றங்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்துமா என்பதனை உறுதியாக கூற முடியாது என புட்டீனாஸ் தெரிவித்திருந்ததாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment