Saturday, October 22, 2011

கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த ஈராக் போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக-ஒபாமா அறிவிப்பு!

Saturday, October 22, 2011
வாஷிங்டன் : கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த ஈராக் போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகவும், இதனையடுத்து, இந்தாண்டின் இறுதிக்குள்ளாக, ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்படும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

ஈராக் பிரதமர் நூரி அல் மாலிகி உடனான வீடியோ கான்பரன்சிங்கிற்கு பிறகு, வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை அதிபர் ஒபாமா சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஈராக்கில், முன்னாள் அதிபர் சதாம் உசேன் மறைவின் போதிலிருந்து அங்கே அமைதி திரும்பத் துவங்கி விட்டது. ஆனால், ஈரான் <மற்றும் பல்வேறு வெளிநாட்டு அமைப்புகளால் ஈராக்கிற்கு அச்சுறுத்தல் தொடர்ந்தவண்ணம் இருந்தது. அதற்காகவே, அமெரிக்கப் படைகள் அங்கு தங்கியிருந்தது. தற்போது அங்கு சகஜநிலை திரும்பியுள்ளது. மேலும் பொருளாதாரத்தில் சிறந்த ஸ்திரத்தன்மையும் உருவாகும் நிலை ஏற்பட்டது. இதன்மூலம், ஈராக் புத்துயிர் பெறும் என்று தங்களுக்கு நம்பிக்கை வந்ததையடுத்து, அங்கிருந்து படைகள் வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டது. அமெரிக்காவின் இந்த முடிவுக்கு, ஈராக் பிரதமர் மாலிகியும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

அடுத்த 2 மாதங்களுக்குள், ஈராக்கில் <உள்ள அமெரிக்கப் படையினர் தாயகம் திரும்ப உள்ளனர். அவர்களின் முகத்தில், வெற்றிக்களிப்பு தற்போதே தெரிவதாகவும்,, விரைவில் அவர்களின் குடும்பத்தினரும் இந்த வெற்றியை கொண்டாட இருப்பதாக அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment