Saturday, October 22, 2011

வடக்கில் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும் புலிகள் மேற்கொண்ட தவறுகளுக்காக இலங்கைத் தமிழ் மக்களை அரசாங்கம் தண்டித்துவிடக் கூடாது-சம்பந்தன்!

Saturday, October 22, 2011
வடக்கில் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும் புலிகள் மேற்கொண்ட தவறுகளுக்காக இலங்கைத் தமிழ் மக்களை அரசாங்கம் தண்டித்துவிடக் கூடாது-சம்பந்தன்!

வடக்கில் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்கில் கைச்சாத்திடப்பட்ட பண்டா செல்வா ஒப்பந்தம் அமுல்படுத்தப்பட்டிருந்தால் தமிழர்களுக்கு இவ்வாறான ஓர் நிலைமை ஏற்பட்டிருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலிகள் மேற்கொண்ட தவறுகளுக்காக, இலங்கைத் தமிழ் மக்களை அரசாங்கம் தண்டித்துவிடக் கூடாது என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு கிழக்கு பிரச்சினை தொடர்பில் பாராளுமன்றில் தற்போது நடத்தப்பட்ட விவாதத்தில் கலந்து கொண்ட போது சம்பந்தன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்களை நிறுவும் முனைப்புகளில் அரசாங்கம் அவசரம் காட்டி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

வடக்கு கிழக்கில் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டு மக்கள் பூரண சுதந்திரத்தை அனுபவிக்கக் கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment