Tuesday, October 11, 2011
நடந்து முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தல்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றியீட்டியதையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக நீண்டகாலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் வாக்களித்துவந்த 850 தமிழ் வாக்காளர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்தனர்.நேற்று காலை இந்நிகழ்வு இடம் பெற்றது.
கல்குடா தேர்தல் தொகுதியிலுள்ள செங்கலடி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள தம்பானம்வெளி கிராமத்தைச்சேர்ந்த மக்களே இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அங்கத்துவ அட்டைகளைப்பெற்று கட்சியில் இணைந்து கொண்டனர்.
கல்குடா தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதம அமைப்பாளர் கலாநிதி டி.எம்.சந்திரபாலவிடமிருந்து இவர்கள் அங்கத்துவ அட்டைகளைப்பெற்றுக்கொண்டனர்.
தம்பானம்வெளி கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் இடம் பெற்ற வைபவத்தில் மகிழவெட்டுவான் வித்தியாலய அதிபர் கே.லீலாதரன் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.புதிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கிளையொன்றும் அமைக்கப்பட்டு நிர்வாகிகளும் தெரிவாகினர்.

No comments:
Post a Comment