


Thursday, October 06, 2011தாய்லாந்தில் புயல் தாக்கியதால் பலத்த மழை பெய்து வருகிறது. தலைநகர் பாங்காக்கில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் வாகன போக்குவரத்து நடைபெறவிலை. வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மழை வெள்ளத்துக்கு இதுவரை 237 பேர் பலியானார்கள்.
தொடர்ந்து தாழ்வு நிலை நீடிப்பதால் மழை மேலும்சில நாட்களுக்கு பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment