Sunday, October 9, 2011

21 உள்ளுராட்சி சபைகள் அரசாங்க வசம்!

Sunday, October 09, 2011
நடைபெற்று முடிந்த 23 உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 21 உள்ளுராட்சி சபைகளை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ{ம் தலா ஒவ்வொரு உள்ளுராட்சி மன்றங்களை கைப்பற்றியுள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் இருந்த நுவரெலியா, கண்டி, தெஹிவலை – கல்கிஸ்ஸை கம்பஹா ஆகிய உள்ளுராட்சி சபைகளை இந்த தேர்தலில் அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது.

குறிப்பாக கடந்த 60 வருடங்களாக ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் இருந்து கண்டி மாநகர சபையும், இந்த முறை அரசாங்கத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் கொலனாவை நகரசபை மற்றும், கண்டி கங்கவட்ட கோரலை பிரதேச சபை ஆகியவற்றையும் அரசாங்கம் வெற்றிப் பெற்றுள்ளது.

மாத்தறை மாவட்டம் மாத்தறை நகரசபை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி பெற்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 20 ஆயிரத்து 681 வாக்குகளுடன் 9 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 12 ஆயிரத்து 619 வாக்குகளுடன், 6 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

ஜே வி பி – ஆயிரத்து 449 வாக்குகளுடன், ஒரு ஆசனத்தை பெற்றுக் கொண்டது.

குருநாகல் மாவட்டம், குருநாகல் மாநகரசபையில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 8 578 வாக்குகளுடன் 8 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 4 838 வாக்குகளுடன், 4 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

ஹம்பாந்தொட்டை மாவட்டம், ஹம்பாந்தொட்டை பிரதேசசபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 11 836 வாக்குகளுடன் 6 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 3 788 வாக்குகளுடன், 1 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

ஜே வி பி – 853 வாக்குகளைப் பெற்றுள்ளது, ஆசனங்கள் எதனையும் கைப்பற்றவில்லை.

அனுராதபுரம் மாவட்டம், அனுராதபுர மாநகரசபைக்கான தேர்தல் முடிவுகளின் படி,

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 14 849 வாக்குகளுடன் 10ஆசனங்களைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 5 ஆயிரத்து 28 வாக்குகளுடன், 3 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

ஜே வி பி – 853 வாக்குகளைப் பெற்றுள்ளது, ஆசனங்களை எதனையும் கைப்பற்றவில்லை.

காலி மாவட்டம், காலி மாநகரசபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 23 539 வாக்குகளுடன் 11 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 16 ஆயிரத்து 137 வாக்குகளுடன், 7 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

ஜே வி பி – ஆயிரத்து 85 வாக்குகளைப் பெற்று, 1 ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது.

நுவரெலியா மாவட்டம், நுவரெலியா மாநகரசபையை அரசாங்கம் வெற்றி பெற்றது, அங்கு,

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 6 275 வாக்குகளுடன் 6 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 5 ஆயிரத்து 781 வாக்குகளுடன், 3 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

இலங்கை ஜனநாயக ஐக்கிய முன்னணி ஆயிரத்து 237 வாக்குகளைப் பெற்று, 1 ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது.

கண்டி மாவட்டம், கண்டி மாநகரசபைக்கான தேர்தல் முடிவுகளின் படி,

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 23 189 வாக்குகளுடன் 13 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 20 ஆயிரத்து 87 வாக்குகளுடன், 10 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆயிரத்து 248 வாக்குகளைப் பெற்று, 1 ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது.

ஹம்பாந்தொட்டை மாவட்டம், ஹம்பாந்தொட்டை மாநகரசபைக்கான தேர்தல் முடிவுகளின் படி,

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 6 183 வாக்குகளுடன் 8ஆசனங்களைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 4 742 வாக்குகளுடன், 4 ஆசனங்களைப் பற்றுள்ளது.

பதுளை மாவட்டம், பதுளை மாநகரசபைக்கான தேர்தல் முடிவுகளின் படி,

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு –13 337 வாக்குகளுடன் 10 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 6 982 வாக்குகளுடன், 5 ஆசனங்களைப் பற்றுள்ளது.

மலையக மக்கள் முன்னணி 453 வாக்குகளைப் பெற்றுள்ளது, ஆசனங்களை எதனையும் வெற்றி பெறவில்லை.

கண்டி மாவட்டம், குண்டசாலை பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகளின் படி,

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 34 488 வாக்குகளுடன் 14 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 16 ஆயிரத்து 934 வாக்குகளுடன், 6 ஆசனங்களைப் பற்றுள்ளது.

சுயேட்சைக்குழு ஒன்று, 2 ஆயிரத்து 128 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும், ஜே வி பி ஆயித்து 561 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் வெற்றுப் பெற்றுள்ளன.

மலையக மக்கள் முன்னணி 453 வாக்குகளைப் பெற்றுள்ளது, ஆசனங்களை எதனையும் வெற்றி பெறவில்லை.

மாத்தளை மாவட்டம், மாத்தளை மாநகரசபைக்கான தேர்தல் முடிவுகளின் படி,

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 11 ஆயிரத்து 407 வாக்குகளுடன் 9 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 4 ஆயிரத்து 751 வாக்குகளுடன், 3 ஆசனங்களைப் பற்றுள்ளது.

சுயேட்சைக்குழு ஐந்து, 528 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளது.

இரத்தினபுரி மாவட்டம், இரத்தினபுரி மாநகரசபைக்கான தேர்தல் முடிவுகளின் படி,

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 15 ஆயிரத்து 626 வாக்குகளுடன் 11 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 6 ஆயிரத்து 820 வாக்குகளுடன், 4 ஆசனங்களைப் பற்றுள்ளது.

கண்டி மாவட்டம், கங்கவட்ட கொரலை பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகளின் படி,

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 14 ஆயிரத்து 83 வாக்குகளுடன் 8 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 9 ஆயிரத்து 418 வாக்குகளுடன், 4 ஆசனங்களைப் பற்றுள்ளது.

ஹம்பாந்தொட்டை மாவட்டம், சூரியவௌ பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகளின் படி,

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 14 ஆயிரத்து 279 வாக்குகளுடன் 4 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 5 ஆயிரத்து 388 வாக்குகளுடன், 1 ஆசனங்களைப் பற்றுள்ளது.

கம்பஹா மாவட்டம், கம்பஹா மாநகரசபை தேர்தல் முடிவுகளின் படி,

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 22 ஆயிரத்து 679 வாக்குகளுடன் 14 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 6 ஆயிரத்து 478 வாக்குகளுடன், 3 ஆசனங்களைப் பற்றுள்ளது

சுயேட்சைக் குழு மூன்று, 835 வாக்குகளுடன் 1 ஆசனத்தை பெற்றுள்ளது.

கம்பஹா மாவட்டம், நீர்கொழும்பு மாநகரசபை தேர்தல் முடிவுகளின் படி,

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 37 ஆயிரத்து 232 வாக்குகளுடன் 16 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 24 ஆயிரத்து 712 வாக்குகளுடன், 9 ஆசனங்களைப் பற்றுள்ளது

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1 588 வாக்குகளுடன் 1 ஆசனத்தை பெற்றுள்ளது.

அம்பாறை மாவட்டம், கல்முனை மாநகர சபை தேர்தல் முடிவுகளின் படி,

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 22 ஆயிரத்து 356 வாக்குகளுடன் 11 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு – 9 ஆயிரத்து 911 வாக்குகளுடன் 4 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 8 ஆயிரத்து 524 வாக்குகளுடன், 3 ஆசனங்களைப் பற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 2 ஆயிரத்து 805 வாக்குகளுடன், ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளது.

கொழும்பு மாவட்டம், கொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகளின் படி,

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 37 ஆயிரத்து 998 வாக்குகளுடன், 16 ஆசனங்களைப் பற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 12 ஆயிரத்து 269 வாக்குகளுடன், 5 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

கொழும்பு மாவட்டம், கொலனாவை நகரசபைக்கான தேர்தல் முடிவுகளின் படி,

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 11 ஆயிரத்து 303 வாக்குகளுடன், 6 ஆசனங்களைப் பற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 10 ஆயிரத்து 667 வாக்குகளுடன், 4 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

ஜனநாயக மக்கள் முன்னணி, 938 வாக்குகளைப் பெற்று, 1 ஆசனத்தைப் பெற்றுள்ளது.

கொழும்பு மாவட்டம், ஸ்ரீ ஜயவர்த்தன புர கோட்டை மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகளின் படி,

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 26 ஆயிரத்து 723 வாக்குகளுடன், 13 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 10 ஆயிரத்து 830 வாக்குகளுடன், 5 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

சுயேச்சை குழு மூன்று, 2 ஆயிரத்து 178 வாக்குகளைப் பெற்று, 1 ஆசனத்தைப் பெற்றுள்ளது.

லங்கா சமசமாஜ கட்சி ஆயிரத்து 291 வாக்குகளைப் பெற்று, ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளது.

கொழும்பு மாவட்டம், மொரட்டுவ மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகளின் படி,

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 26 ஆயிரத்து 723 வாக்குகளுடன், 13 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 45 ஆயிரத்து 286 வாக்குகளுடன், 18 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

சுயேச்சை குழு ஒன்று, 3 ஆயிரத்து 478 வாக்குகளைப் பெற்று, 1 ஆசனத்தையும், ஜே வி பி ஆயிரத்து 585 வாக்குளைப் பெற்று ஓரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.

கொழும்பு மாவட்டம், தெஹிவலை – கல்கிஸ்ஸை மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகளின் படி,

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 39 ஆயிரத்து 812 வாக்குகளுடன், 16 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 31 ஆயிரத்து 82 வாக்குகளுடன், 11 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

ஜனநாயக மக்கள் முன்னணி, 2 ஆயிரத்து 167 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும், ஜே வி பி ஆயிரத்து 568 வாக்குளைப் பெற்று ஓரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.

கொழும்பு மாநகரசபையை ஐக்கிய தேசிய கட்சி தக்க வைத்துக் கொண்டது.

அங்கு ஐக்கிய தேசிய கட்சி ஒரு லட்சத்து, ஆயிரத்து 920 வாக்குகளைப் பெற்று, 24 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 77 ஆயிரத்து 89 வாக்குகளைப் பெற்று, 16 ஆசனங்களைக் கைப்பற்றியது.

ஜனநாயக மக்கள் முன்னணி ஆறு ஆசனங்களைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும், ஜனநாயக ஐக்கிய கூட்டணி என்பன தலா இரண்டு ஆசனங்களையும், சுயாதீன குழு ஒன்று மற்றும் இரண்டு, ஜே வி பி என்ற தலா ஒவ்வொரு ஆசனங்களையும் கைப்பற்றின.

No comments:

Post a Comment