Sunday, October 09, 2011
ஹிண்டன் (காசியாபாத்): இந்திய விமானப்படைக்கு பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் விமானங்கள் வாங்குவது தொடர்பான ஒப்பந்தம், விரைவில் இறுதி செய்யப்படும். வரும் 18ம் தேதி இதற்கான டெண்டர்கள் திறக்கப்படும்,'' என, விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் என்.ஏ.கே.பிரவ்னே கூறியுள்ளார். இந்திய விமானப்படையின் 79வது ஆண்டு தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி நடந்த விமானப்படையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சியை பார்வையிட்ட பின், பிரவ்னே பேசியதாவது: பல்வகை பயன்பாடு கொண்ட போர் விமானங்களை வாங்கும் திட்டம், இறுதிக் கட்டத்தில் உள்ளது. இதுதொடர்பான வர்த்தக டெண்டர்கள் இன்னும் 10 நாட்களில் திறக்கப்படும். அதன்பின் பல நூறு கோடி ரூபாய் மதிப்பில், விமானப்படைக்கு விமானங்கள் வாங்குவது இறுதி செய்யப்படும். விமானங்கள் வாங்குவது தொடர்பாக, ரபாலே மற்றும் ஈரோ பைட்டர் டைபூன் நிறுவனங்கள் சமர்ப்பித்துள்ள டெண்டர்களை திறக்க, ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. டெண்டர்கள் திறக்கப்பட்ட உடன், எந்த நிறுவனம் குறைவான விலைப்புள்ளியை குறிப்பிட்டுள்ளது என கண்டறியப்பட்டு, அதன்பின் விதிமுறைகள் அடிப்படையில், விமானப்படைக்கு விமானங்கள் சப்ளை செய்ய உள்ள நிறுவனம் எது என்பது முடிவு செய்யப்படும்.
அமெரிக்காவுடன், கடந்த 2007ல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி வாங்கப்பட்ட, சி-130ஜே- ரக விமானத்தின் செயல்பாடு நன்றாக உள்ளது. சிக்கிம் பூகம்ப நிவாரண பணியின்போது, இந்த விமானத்தின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. இந்த ரகத்தில் ஐந்து விமானங்கள், விமானப்படையில் உள்ளன. மேலும், ஆறு விமானங்கள் விரைவில் வாங்கப்பட உள்ளன.
நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, நாட்டில் உள்ள மலைகள் மற்றும் இதர இடங்களில் விரிவான ரேடார் முறைகளை உட்புகுத்த விமானப்படை திட்டமிட்டுள்ளது. பாதுகாப்புக்கு ஏதாவது அச்சுறுத்தல் எனில், அதை உடனே எதிர்கொள்ளும் வகையில், டில்லி மற்றும் பெருநகரங்களில் விமானப்படை போர் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்படும். வரும் 2014ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் விரிவான மற்றும் முழுமையான ரேடார் நெட்வொர்க் செயல்பாட்டிற்கு வரும். இவ்வாறு பிரவ்னே பேசினார்.
சமீப நாட்களில் மிக்-21 ரக விமானங்கள் அடிக்கடி நொறுங்கி விழுவதற்கு, விமானத்தை கையாளும் இளம் பைலட்களின் அனுபவமின்மையே காரணம். இந்த ஆண்டு விமானப்படைக்கு சொந்தமான ஆறு விமானங்கள் நொறுங்கி விழுந்துள்ளன. இவற்றில் நான்கு மிக்-21 ரக விமானங்கள். 1960ம் ஆண்டுகளுக்குப் பின், விமானப்படையில் 976, மிக்-21 ரக விமானங்கள் சேர்க்கப்பட்டன. இவற்றில் பாதிக்கும் மேற்பட்ட விமானங்கள் விழுந்து நொறுங்கிவிட்டன.

No comments:
Post a Comment