Thursday, October 27, 2011

மணிப்பூரில் 2 இடங்களில் குண்டு வெடித்தது-7 பேர் பலி!

Thursday, October 27, 2011
மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் நேற்றிரவு மக்கள் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இம்பாலின் முக்கிய தெருக்களில் உள்ள ஜவுளி மற்றும் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இரவு 8 மணி அளவில் அங்குள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதனால் மக்கள் அலறியடித்தப்படி நாலா புறமும் சிதறி ஓடினார்கள்.

அடுத்த சில நிமிடங்களில் அங்குள்ள ஜவுளிக்கடை ஒன்றில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் அந்த கட்டிடமே குலுங்கி நொறுங்கியது. குண்டுவெடிப்பில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்துள்ளனர். இந்த குண்டு வெடிப்புக்கு எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை

No comments:

Post a Comment