Thursday, October 27, 2011இலங்கையில் நல்லினக்கத்தை ஏற்படுத்துவதற்கான பொறுப்புடமை செயற்பாடுகளின் முக்கியத்துவத்தை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழுவுடன் நேற்றைய தினம் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே செயலாளர் நாயகம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மனித உரிமைகள் தொடர்பான விசேட பிரதிநிதி அமைச்சர் மஹிந்த சமரசிங்க கலந்துகொண்டதாக ஐக்கிய நாடுகளின் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
2009ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பொழுது வெளியிட்ட கூட்டறிக்கை தொடர்பில் தற்போது இரு தரப்பினரிடையே இடம்பெறும் கலந்துரையாடல் தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
உண்மையான அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு தேசிய மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதன் முக்கியத்துவம் மற்றும் வடக்கில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் தரம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக நேற்று இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்தின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment