Thursday, October 27, 2011

நீண்ட சிவில் யுத்தத்தின் பின்னர் இலங்கையில் பூரண நல்லிணக்க முனைப்புக்கள் காட்டப்பட வேண்டும்- பான் கீ மூன்!

Thursday, October 27, 2011
நீண்ட சிவில் யுத்தத்தின் பின்னர் இலங்கையில் பூரண நல்லிணக்க முனைப்புக்கள் காட்டப்பட வேண்டும்- பான் கீ மூன்!

குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.

நீண்ட சிவில் யுத்தத்தின் பின்னர் இலங்கையில் பூரண நல்லிணக்க முனைப்புக்கள் காட்டப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஐக்கிய நாடுகளின் தலைமைக் காரியாலயத்தில் பான் கீ மூனை சந்தித்த போது இந்தக் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன.

2009ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலளார் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்த போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் பான் கீ மூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையை கடந்த மனித உரிமைப் பேரவை அமர்வுகளுக்கு பான் கீ மூன் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment