Saturday, October 8, 2011

புலிகளுடன் நடத்திய போரில் கடைசி 14 நாட்களை பற்றி மட்டுமே சிலர் பேசுகின்றனர் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல!

Saturday, October 08, 2011
புலிகளுடன் நடத்திய போரில் கடைசி 14 நாட்களை பற்றி மட்டுமே சிலர் பேசுகின்றனர் என அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.சுமார் 11,000 நாட்கள் புலிகளின் அழுத்தங்களினால் நாடு இன்னல்களை எதிர்நோக்கியது. இது பற்றி எவரும் கவனம் செலுத்துவதில்லை.

எனினும், இறுதி 14 நாட்களில் இடம்பெற்ற சம்பவங்கள் பற்றி மட்டும் கேள்வி எழுப்புவது வருத்தமளிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தப் 11,000 நாட்களில் அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள், கலைஞர்கள் உள்ளிட்ட பல தரப்பினரையும் புலிகள் படுகொலை செய்தனர்.

பாரிய கொடூரங்களை இழைத்த புலிகளின் நடவடிக்கைகள் குறித்து எவரும் கேள்வி எழுப்புவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு எதிராக சில ஊடகங்கள் போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றன.

பெரும்பான்மையான ஊடகவியலாளர்கள் சிறந்த முறையில் கடமையாற்றி வருகின்ற போதிலும், ஒரு சில ஊடகவியலாளர்கள் இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment