Saturday, October 08, 2011
ஜெய்ப்பூர்: மிக்-21 போர் விமானத்தை தரையிறக்கும் போது, கோளாறு ஏற்பட்டதால் தற்காப்பு நடவடிக்கை மூலம் விமானி உயிர் தப்பினார்.
இந்திய விமானப்படையின் போர் விமானமான மிக்-21 விமானத்தை நேற்று வழக்கமான பணிக்காக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உத்தரலை விமான நிலையத்திற்கு விமானி அமிட் ஓட்டி சென்றார். காலை 11.30 மணியளவில் விமானத்தை உத்தரலை விமான நிலையத்தில் தரையறக்க முயன்றபோது, அதில் கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் விமானி அமிட், தற்காப்பு நடவடிக்கைக்கான பாரச்சூட் மூலம் விமானத்தில் இருந்து குதித்து பத்திரமாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளதாக, பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மிக்-21 விமானம் விபத்தில் சிக்குவது இது முதல் முறையல்ல. இந்தாண்டில் விபத்தில் சிக்கிய மிக்-21 விமானங்களில் இது 6வது ஆகும். கடந்த 1960ம் ஆண்டு முதல் இந்திய விமானப் படையில் பயன்படுத்தப்பட்டு வந்த 976 மிக்-21 வகை விமானங்களில் பாதிக்கும் மேல் விபத்தில் சிக்கி வீணாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
வரும் 2017ம் ஆண்டோடு இந்த வகை விமானங்களை, விமானப்படையில் இருந்த நீக்க திட்டமிட்டுள்ள நிலையில், அடுத்தாண்டு முதல் அனுபவம் வாய்ந்த விமானிகளை வைத்து மட்டுமே இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment