Saturday, October 15, 2011

13 வால்மார்ட் கடை மூடல் : சீனா அதிரடி நடவடிக்கை!

Saturday, October 15, 2011
பீஜிங்: சீனாவில் 120க்கும் அதிகமான நகரங்களில் 3,000க்கும் அதிகமாகன வால்மார்ட் டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள் உள்ளன. சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சோங்கிங் மாகாணத்தில் உள்ள வால்மார்ட் ஸ்டோர்ஸில் சாதாரண பன்றிக் கறியை, உயர்ரக கறி என்று சொல்லி அதிக விலைக்கு விற்றுள்ளனர். இதுகுறித்து வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர். உடனடியாக விசாரணை நடத்திய அதிகாரிகள், அதிக விலைக்கு விற்றதை உறுதி செய்தனர். இதையடுத்து. சோங்கிங் மாகாணத்தில் உள்ள 13 வால்மார்ட் ஸ்டோர்ஸ்களை மூட உத்தரவிட்டனர்.

2 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். அதிக விலைக்கு பொருட்களை விற்ற வால்மார்ட் நிறுவனத்துக்கு ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. சீனாவில் இதுபோன்ற குற்றங்களுக்கு இதற்கு முன் இவ்வளவு பெரிய தொகை அபராதம் விதிக்கப்பட்டதில்லை. இதுகுறித்து மேற்கத்திய நாடுகளை சேர்ந்த வக்கீல்கள் கூறுகையில், ÔÔஇது அதிகபட்ச தண்டனைÕÕ என்று அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஆனால், சோங்கிங் தொழிற்துறை மற்றும் வர்த்தகத் துறை அதிகாரிகள் கூறுகையில், உணவு பாதுகாப்பு பிரசாரத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள் விஷயத்தில் விதியை மீறினால் இன்னும் கடும் தண்டனை வழங்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.

No comments:

Post a Comment