Saturday, October 15, 2011
யாழ். குடாநாட்டில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்கள் (முகாம் பகுதிகள்) குறித்து கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு யாழ்ப்பாணத்துக்குத் திடீரென விஜயம் செய்து விபரங்களைப் பெற்றுச் சென்றுள்ளது.
நேற்றுமுன்தினம் சென்ற ஆணைக் குழுவினர் குடாநாட்டில் அண்மையில் மக்கள் மீளக்குடியமர்வதற்கு அனுமதிக்கப்பட்ட பிரதேசங்கள் மற்றும் மல்லாகத்தில் அமைந்துள்ள அகதிமுகாமுக்கும் நேரில் சென்று பார்வையிட்டனர்.கடந்த புதன்கிழமை மன்னார் மாவட்டத்துக்கு சென்றிருந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் இரு உறுப்பினர்களும் மொழி பெயர்ப்பாளரும் அங்குள்ள சிறுவர்களைச் சந்தித்தனர். இதன் தொடர்ச்சியாகவே நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை யாழ். மாவட்டத்துக்கு விஜயம் செய்தனர்.
யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் சென்று நிலைமைகளை அவதானித்துள்ளனர். வலி.வடக்கில் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப் பட்ட பிரதேசங்களுக்கு நேரடியாகச் சென்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்தனர். இதன் போது கூரையில்லாத வீடுகள், தகரக் கூடாரங்களுக்குள் வாழும் மக்களையும் சந்தித்து கலந்துரையாடினர்.
மயிலிட்டியைச் சேர்ந்த மக்கள் தங்கியுள்ள மல்லாகம் முகா மையும் அவர்கள் பார்வை யிட்டனர். அதன்போது யுத்தம் முடிவடைந்த பின்னர் இவ்வா றான முகாம்கள் இருப்பது தொடர்பிலும், மக்கள் கூடாரங் களில் வாழ்வது தொடர்பாகவும், பல பிரதேசங்களில் மக்களை மீளக்குடியமர்த்தாதது தொடர் பாகவும், மக்களின் வீடுகள் கட்டடங்களில் இராணுவத்தி னர் பல இடங்களிலும் தங்கியி ருப்பது தொடர்பாகவும் தாம் அவதானித்து தமது அறிக்கை யில் குறிப்பிடவுள்ளதாக ஆணைக் குழுவினர் தெரிவித்தனர்.
மேலும் தெல்லிப்பழையில் துர்க்கை அம்மன் கோயிலில் அமைந்துள்ள சிறுவர் இல்லத் துக்கும் குழுவினர் சென்றனர். இறுதி யுத்தத்துக்கு முன்னர் 40 சிறுவர்கள் வரையே இருந்தனர் என்றும் தற்போது 150 சிறுவர்கள் வரை அங்கு தங்கியுள்ளனர் எனவும் நல்லிணக்க ஆணைக் குழுவினரிடம் எடுத்துக் கூறப்பட்டது. இந்த விடயங்கள் அனைத்தையும் ஆணைக்குழுவினர் செவிமடுத்து குறிப்பெடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment