பாலிவுட் படங்களில் நடிக்க ஆசை: பாரிஸ் ஹில்டன்!மும்பை: பாரிஸ் ஹில்டனுக்கு பாலிவுட் படங்களில் நடிக்கை ஆசையாக இருக்கிறதாம். நல்ல கதைக்காக காத்திருக்கிறாராம்.
நடிகை, சோஷியலைட், கோடீஸ்வரி, தொழிலதிபர், மாடல் அழகி என பல அவதாரங்களைக் கொண்டவர் பாரிஸ் ஹில்டன். தனது கைப்பைகள் உள்ளிட்ட அலங்காரப் பொருட்களை அறிமுகப்படுத்த 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
மும்பையில் தங்கியுள்ள அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்புகள் வரத் தான் செய்கிறது. எனக்கும் பாலிவுட்டில் நடிக்க ஆசையாக உள்ளது. ஆனால் நல்ல கதை இன்னும் கிடைக்கவில்லை. அதற்காகத் தான் காத்திருக்கிறேன் என்றார்.
நீங்கள் நடத்தும் பெஸ்ட் பிரண்ட்ஸ் பார்எவர் ரியாலிட்டி ஷோவை இந்தியாவில் நடத்தலாமே என்று கேட்டதற்கு, எனக்கும் ஆசை தான். ஆனால் நான் தற்போது பிசியாக உள்ளேன் என்றார்.
பெஸ்ட் பிரண்ட்ஸ் பார்எவர் ரியாலிட்டி ஷோ கடந்த 2008-ம் ஆண்டு அமெரிக்காவில் துவங்கப்பட்டது. பின்னர் அது ஹிட்டானவுடன் இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் துவங்கப்பட்டது.
காபி வித் கரண் நிகழ்ச்சியில் பாரிஸ் கலந்துகொள்ளப்போகிறார் என்றும், பாலிவுட் நட்சத்திரங்கள் அவருக்கு பார்ட்டி கொடுக்கப்போகிறார்ள் என்றும் பேசப்படுவது பற்றி கேட்டதற்கு,
இது எல்லாம் வதந்திகள். நான் இங்கு வியாபார விஷயமாகவும், எனது ரசிகர்களை சந்திக்கவும் தான் வந்துள்ளேன்.
பின்னர் பாரிஸ் தனது தயாரிப்பான கைப்பைகள், அழங்காரப் பொருட்களை அறிமுகப்படுத்தினார்.
=====================================================================================
திருமணம் செய்தேனா? ஜெனிலியா கோபம்!இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்குடன் மீண்டும் நடித்து வருகிறார் ஜெனிலியா. ஏற்கனவே இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வரும் நிலையில், இந்தப் பட ஷூட்டிங்கின் போது இவர்கள் திருமணம் செய்துகொண்டதாக மும்பை வட்டாரத்தில் செய்தி வெளியானது. இதுபற்றி ஜெனிலியா கூறியதாவது: கடந்த ஐந்து வருடங்களாக இதைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். எனது தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி மற்றவர்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்று தெரியவில்லை. எங்களுக்கு திருமணம் நடக்கவில்லை என்று பலமுறை சொல்லிவிட்டேன். இதற்கு மேல் என்ன சொல்லவென்று தெரியவில்லை. நாங்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை. அப்படி சொல்பவர்கள் எங்கே, எப்போது நடந்தது என்று சொல்ல முடியுமா? என் கல்யாண தேதியையும் அவர்கள் அறிவித்தால் நன்றாக இருக்கும். தயவு செய்து இனிமேல் இதுபற்றி பேச வேண்டாம். இதை கோரிக்கையாகவே வைக்கிறேன். இப்படி வரும் செய்திகள் எங்கள் இருவருக்குமே பாதிப்பை ஏற்படுத்துகிறது. குடும்பத்திலும் சலசலப்புகள் ஏற்படுகின்றன. ரிதேஷை எனக்கு பல வருடங்களாகத் தெரியும். நீண்டகால நண்பர்களாக இருக்கிறோம். அதைத்தாண்டி எங்களுக்குள் ஏதுமில்லை. இவ்வாறு ஜெனிலியா கூறியுள்ளார்.
=====================================================================================
மயக்கம் என்ன போட்டோகிராபர் கதை!தனுஷ், ரிச்சா நடித்துள்ள படம், ‘மயக்கம் என்ன’. இதுபற்றி நிருபர்களிடம் இயக்குனர் செல்வராகவன் கூறியதாவது: இந்தப் படத்துக்கு பல தலைப்புகள் மாற்றப்பட்டது உண்மை. இது சதாரண மனிதனின் வாழ்க்கையைச் சொல்லும் படம். அப்படிப்பட்டவன் வாழ்க்கையில் தடுமாற்றங்கள் இருக்கத்தானே செய்யும். அப்படித்தான் தலைப்பிலும் தடுமாற்றம். அண்ணன் தம்பி இணைந்து பணியாற்றுவதால் படம் சீக்கிரம் முடிந்து விடும் என்பதை தவிர வேறெந்த சவுகரியமும் இல்லை. இந்தப் படத்தில் ஒரு பாட்டு பாடியுள்ளேன். இதுதான் முதலும், கடைசியுமான பாட்டு. இனி பாடவே மாட்டேன். ‘ஆயிரத்தில் ஒருவன்’ மாதிரியான வித்தியாசமான படங்களை கைவிடவில்லை. அடுத்து புதிய முயற்சிகள் இருக்கும். போட்டோகிராபர்களை குறுகிய வட்டத்தில் வைத்து பார்க்கிறோம். அவர்கள் அதையும் தாண்டி சமூகத்துக்கு எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை இதில் சொல்லியிருக்கிறேன். எனது எல்லாப் படங்களையும் போன்று இதிலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும். அதை ரிச்சா சிறப்பாகச் செய்திருக்கிறார்.
=====================================================================================
சுந்தர்.சி இயக்கத்தில் விமல்!சுந்தர்.சி இயக்கத்தில் விமல் நடிக்கிறார். ‘நகரம்’ படத்துக்குப் பிறகு, குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் தயாரிக்கும் படத்தை இயக்குகிறார் சுந்தர்.சி. பெயரிடப்படாத இப்படத்தில் அவர் நடிக்கவில்லை. விமல், ‘தமிழ்ப் படம்’ சிவா இணைந்து நடிக்கின்றனர். ஹீரோயின்களாக அஞ்சலி, பிந்து மாதவி நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. தற்போது விமல் ‘வாகை சூட வா’, ‘இஷ்டம்’ படங்களில் நடித்து வருகிறார். சுந்தர்.சி இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தின் ஷூட்டிங், நவம்பரில் தொடங்க இருக்கிறது.
=====================================================================================
No comments:
Post a Comment