Sunday, September 25, 2011

ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி கோயம்பேட்டில் வைகோ உண்ணாவிரதம்!

Sunday, September 25, 2011
ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி சென்னை கோயம்பேடு பஸ்நிலையம் அருகில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

சென்னை ஐகோர்ட்டு பெண் வக்கீல்கள் 3 பேர் இதில் பங்கேற்றனர். தூக்கு தண்டனைக்கு 8 வாரம் தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டதையடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.

இதனையடுத்து தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி கடந்த 22-ந் தேதி முதல் கோயம்பேட்டில் தொடர் உண்ணாவிரத போராட்டம் பல்வேறு அமைப்புகள் சார்பில் நடை பெற்று வருகிறது. போராட்டத்தின் முதல் நாள் ஐகோர்ட்டு வக்கீல்கள் சார்பில் உண்ணாவிரதம் நடந்தது. 23-ந் தேதி தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பில் உண்ணாவிரதம் நடந்தது. நேற்று புதிய தமிழகம் சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டார்.

இன்று ம.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் ம.தி. மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். பேரறிவாளன் தாய் அற்புதம் அம்மாள், திரைப்பட இயக்குனர் கவுதமன் ஆகியோரும் பங்கேற்றனர். மற்றும் ம.தி.மு.க. நிர்வாகிகள் வேளச்சேரி மணிமாறன், செல்வபாண்டியன், கன்னியப்பன், சைதை சுப்பிரமணி, ரெட்சன் அம்பிகாபதி உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரத மேடைக்கு செல்லும் நுழைவு வாயிலில் தூக்கு மேடை போல் வடிவமைக்கப்பட்டு அதில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் படமும் அவர்கள் முன் தொங்கும் தூக்கு கயிறை இருகைகள் வெட்டுவது போலவும் சித்தரிக்கப்பட்டு இருந்தது.

No comments:

Post a Comment