Sunday, September 25, 2011தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேசிய மாநாடு அதன் தலைவர் ஆனந்தசங்கரியின் தலமையில் யாழ்.நல்லூர் வடக்கு வீதியில் உள்ள நடராஜா மண்டபத்தில் நடைபெற்றது.
இன்று ஞயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்ற இந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேசிய மாநாட்டில் புளோட்டின் தலைவர் தர்மலிங்கம் சித்தாத்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வினோதலிங்கம் மற்றும் ரெலோவின் அரசியல் பிரிவுத் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாப அணி சிறிதரன், சிறிரெலோ உதயன் ஆகியோரும் பிரதேச சபை தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த தேசிய மாநாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வலுவான ஒரு அமைப்பாக உருவாக்குவதற்கு அனைத்து கட்சிகளும் ஒரு பொது விடயத்தில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காக ஒன்றினைய வேண்டும் என்ற உரிமை முழக்கம் மேடைகளில் முழங்கியது.
இந்த தேசிய மாநாட்டில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பென்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
அத்தோடு தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொள்கை விளக்கும் தீர்மானங்கள் அடங்கிய ஆவணங்கள் வெளியீடு செய்யப்பட்டன.
No comments:
Post a Comment