Monday, September 26, 2011

மேற்குலக நாடுகள் இலங்கையை அரசியல் உதை பந்தாகப் பயன்படுத்துகின்றன – ஜீ.எல்.பீரிஸ்!

Monday, September 26, 2011
மேற்குலக நாடுகள் இலங்கையை அரசியல் உதை பந்தாகப் பயன்படுத்துகின்றன என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா மேற்குலக நாடுகள் இலங்கையின் மீது தேவையற்ற அழுத்தங்களை பிரயோகிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்திலிருந்து மீள்வதற்கு அரசாங்கம் முயற்சித்து வரும் சந்தர்ப்பத்தில் மேற்குலக நாடுகள் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் படையினர் பொதுமக்களை இலக்குவைத்து தாக்குதல்களை நடத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு விசாரணைகளை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எவரேனும், யுத்தக் குற்றச் செயல்கள் அல்லது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக இலங்கை நீதிமன்றில் வழக்குத் n;தாடரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய செனல்4 ஆவணப்படம் உள்ளிட்ட சகல குற்றச்சாட்டுக்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைகளை நடத்துவதற்கு போதியளவு கால அவகாசம் வழங ;கப் பட வேண்டும் எனவும், தற்போதைக்கு சர்வதேச சமூகம் இந்த விவகாரத்தில் தலையீடு செய்யக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகளை முடிவுறுத்துவது தொடர்பில் காலக்கெடு விதிக்க முடியாது எனவும், 2012ம் ஆண்டில் வடக்கில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நூற்றுக் கணக்கான தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடுமையான குற்றச் செயல்களுடன் ஈடுபட்ட விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் இவ்வாறு தண்டிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சுமார் இரண்டாயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment