Monday, September 26, 2011சிலர் பிரச்சினைக்கு தீர்வினை காண்பதை விடுத்து அவற்றை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துவதாக வீடமைப்பு பொறியியல் நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவிக்கின்றனர்.
வவுனியா அரச ஊழியர்களுக்கான வீடமைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் வகையில் இடம்பெற்ற நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களி்ல் வாழ்கின்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லீம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதன் மூலம் அனைவரும் ஒன்றினைந்து வாழக்கூடிய நாடொன்றை உருவாக்க முடியுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பகைமையை தோற்றுவித்தவர்களுக்கு வெற்றி கிடைக்காததெனக் குறிப்பிட்ட அவர், அவர்களுக்கு தோல்வி மட்டுமே கிட்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் காலங்களிலும் பகைமையை தோற்றுவிப்பவர்களுக்கு தொடர்ச்சியாக தோல்வியே கிடைக்குமெனவும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment