Tuesday, September 13, 2011
முதுகில் குத்தியது UNP. நெஞ்சில் குத்துகிறது TNA. தடியைக் கொடுத்து அடி வாங்கிய மனோ கணேசன்!
ஐக்கிய தேசியக் கட்சி தனது முதுகில் குத்தியது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ தனது நெஞ்சில் குத்திவிட்டதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தனது கவலையை நண்பர்களு டன் பகிர்ந்துள் ளார்.
தான் கொழும்பு மாநகரின் மேயராக வந்துவிடுவேன் எனும் பயத்தினால் ஐ. தே. க பல சதிகளைச் செய்து பின்னாலிருந்து முதுகில் குத்தி வருகிறது. அதே பயத்தினால்தான் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனது நெஞ்சில் குத்திவருவதாக அவர் கவலைப்பட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்த லில் வடக்கிற்குச் சென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்காக மனோ கணேசன் பிரசாரம் செய்திருந்தார். அதற்கு பிரதி உபகாரமாக கொழும்பில் தனக்கு தமிழ்க் கூட்டமைப்பு உதவிபுரியும் என்பதே மனோவின் எதிர்பார்ப்பாக இருந்தது.
ஆனால் கொழும்பு பல்லின மக்கள் வாழும் இடம். இங்கு எமது தனித்தமிழ் வாசிப்பு அழகல்ல எனக்கூறி தமிழ்க் கூட்டமைப்பு தட்டிக் கழித்துவிட்டது. அதுமட்டுமல்லாது மனோ அழையா விருந் தாளியாக வந்து இந்த உள்நோக்கத்துடன் வடக்கில் பிரசாரம் செய்தது தமக்குத் தெரியாது எனவும் கூட்டமைப்பு கையை விரித்துள்ளதாகத் தெரியவருகிறது.
தமிழ்க் கூட்டமைப்பிலுள்ள சிலர் தமது சொந்த சுய விருப்பின் அடிப்படையில் மனோவிற்கு உதவி செய்தாலும் அது தமிழ்க் கூட்டமைப்பின் முடிவல்ல எனவும் தலைமை மறைமுகமாக அறிவித்து வருகிறது. விடுதலைப் புலிகளையே நட்டாற்றில் கைவிட்ட தமிழ்க் கூட்டமைப் பிற்கு மனோ எம்மாத்திரம் என்றாலும் தடியைக் கொடுத்து அடிவாங்கிய தர்ம சங்கடமான நிலைக்கு மனோ தள்ளப்பட்டி ருக்கிறார் என்பது மட்டும் உண்மை.
இதேவேளை மனோவின் உடன்பிறப் பான தம்பி பாஸ்கரன் கணேசன் வெற்றியை நோக்கியுள்ள ஆளுங்கட்சியில் இணைந்து மனோவிற்கு எதிராக போட்டி யிடுவதால் அவரது குடும்ப வாக்குகளைக் கூடப் பெறமுடியாத நிலைக்கு மனோ தள்ளப்பட்டிருக்கிறார்.

No comments:
Post a Comment