Sunday, September 18, 2011

சர்வதேசஅழுத்தம் - UN தனிநபர் ஆணைக்குழுவும் முள்ளிவாய்க்கால் பேரவல நிலைகளை ஆராயவுள்ளது!

Sunday, September 18, 2011
சர்வதேச மன்னிப்புச் சபை, இன்டர்நேஷனல் க்ரைசீஸ் குறுப் ஆகிய சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்வைத்த அறிக்கைகளின் அடிப்படையிலேயே வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பான மீண்டும் விசாரணைகளை நடத்த ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்-கீ-மூன், ஐக்கிய நாடுகளின் முன்னாள் பெண் அதிகாரி ஒருவரை நியமித்துள்ளதாக கூறப்படுகிறது.

சர்வதேச மன்னிப்புச் சபை 69 பக்கங்களை கொண்ட அறிக்கையையும், இன்டர்நேஷனல் க்ரைசீஸ் குறுப் 8 பக்கங்களை கொண்ட அறிக்கையையும் ஐக்கிய நாடுகள் செயலாளருக்கு அனுப்பி வைத்திருந்தது.

வன்னியில் இயங்கிய 21 அரசசார்பற்ற நிறுவனங்களின் 100க்கும் மேற்பட்ட நிவாரண பணியாளர்களின் சாட்சியங்களின் அடிப்படையில், சர்வதேச மன்னிப்புச் சபை இந்த அறிக்கை தயாரித்துள்ளது.

அதேவேளை வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட போர் குறித்து மீண்டும் விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ள தொராயா ஓபெய்டடின் என்பவர் சென்டர் பே டயலொக் உட்பட 5 அரசசார்பற்ற நிறுவனங்களில் தலைவராக செயற்பட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.

பெண்கள் தொடர்பான பிரச்சினைகள் பற்றிய செயற்பாடுகளில் ஈடுபட்ட வந்த அவரை இராணுவ நடவடிக்கை குறித்து விசாரணை நடதத நியமித்து இருப்பது இதுவே முதன் முறையாகும் எனவும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment