Sunday, September 18, 2011

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பக்கச்சார்பற்ற தன்மை குறித்து திவயின பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது!

Sunday, September 18, 2011
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பக்கச்சார்பற்ற தன்மை குறித்து திவயின பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.மனித உரிமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு பின்பற்றி வரும் கோட்பாடுகளும் கொள்கைகளும் போலியானவை.

போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் எதற்காக? யாருக்காக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்?

கொடூரமான பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட பயங்கரவாத அமைப்பு ஒன்றின் தலைவருக்கு எதிராக இலங்கை அரசாங்கப் படையினர் போர் நடத்தி வெற்றியீட்டினர்.

இந்தப் போர் ஓர் மனிதாபிமான மீட்பு நடவடிக்கையாக நோக்கப்பட வேண்டும்.

அமெரிக்கா, ஒசாமா பின் லேடன் என்ற தீவிரவாதியை எவ்வாறு இல்லாதொழித்ததோ அதேபோன்று பிரபாகரனை இல்லாதொழிக்க அரச படையினர் நடவடிக்கை எடுத்தனர்.

போர் என்பதே குற்றச் செயல்தான் எனவும் இதில் நல்ல போர், தீய போர் என்றெல்லாம் கிடையாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தீவிரவாதத்தை இல்லாதொழிக்க வேண்டுமென குரல்கொடுக்கும் பல தரப்பினர் இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்ததை ஏற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டுகின்றனர்.

தாருஸ்மன் அறிக்கை ஓர் போலியானது, அந்த அறிக்கையின் மூலம் எவருக்கும் நன்மை ஏற்படாது என திவயின பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment