Sunday, September 18, 2011

முன்னாள் புலி போராளிகள் இந்த மாத இறுதிக்குள் சமூகமயப்படுத்தப்படும்!

Sunday, September 18, 2011
முன்னாள் புலி போராளிகள் இந்த மாத இறுதிக்குள் சமூகமயப்படுத்தப்படும்

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி போராளிகள் அனைவரையும் இந்த மாத இறுதிக்குள் சமூகமயப்படுத்தப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்த புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்கள் கட்டம் கட்டமாக உறவினர்களிடம் உப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய தற்போது சுமார் இரண்டாயிரத்து 700 முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு நிலையங்களில் தங்கியுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் கஜதீர தெரிவித்துள்ளார்.

இவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதை குறிக்கும் வகையில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு முன்னாள் போராளிகளுக்கு அவர்களது தம்பி தங்கைகளை சந்திப்பதற்கான வாய்ப்பு இன்று ஏற்படுத்திக்கொடுக்கப்படவுள்ளது.

புனர்வாழ்வு நிலையங்களில் தங்கியுள்ள புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களை சந்திப்பதற்காக அவர்களது பெற்றோர் அவ்வப்போது வந்து சென்றாலும் அவர்களது தம்பி தங்கைகளை சந்திப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதனைக் கருத்திற்கொண்டு இன்று முன்னாள் போராளிகள் அவர்களது சகோதரர்களுடன் பல்வேறு களியாட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகளை புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு மேற்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment