மன்னாரில் வர்த்தகரைக் கொன்ற மாணவன் உட்பட இருவருக்கு விளக்கமறியல்:-சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த விமான படை அதிகாரிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!
Thursday,September 15,2011
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஆக்காட்டி வெளிக் கிராமத்தில் வர்த்தகர் ஒருவர் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மாணவர் ஒருவர் உட்பட இருவரைத் தொடர்ந்தும் 14 நாள்களுக்கு விளக்க மறியலில் வைக்குமாறு மன்னார் நீதிவான் திருமதி. கே.ஜீவராணி கடந்த திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார்.ஆக்காட்டி வெளிக் கிராமத்தைச் சேர்ந்த வர்த்தகரான கனகரத்தினம் மகேந்திரன் (வயது 42) என்பவர் தனது கடைக்குள்ளேயே வைத்து கடந்த மாதம் 31 ஆம் திகதி இரவு மிகக்கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
பின் அதே இடத்தைச் சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரும் சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று இரவு 10 மணிக்குப் பலத்த காயங்களுடன் மன்னார் பொது வைத் தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.இவருடைய உடலில் சந்தேகத்துக்கிடமான இரத்தக்கறைகள் காணப்பட்டன. பின் வைத்தியசாலையில் வைத்து குறித்த மாணவனை விசாரணை செய்தபோது குறித்த கொலையுடன் மாணவர் தொடர்புபட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
பொலிஸாரின் விசாரணையின் போது குறித்த மாணவனால் மேலும் ஒரு நபர் அடை யாளம் காட்டப்பட்டார்.பின் கடந்த 4 ஆம் திகதி பொலிஸார் குறித்த நபரை மன்னார் நீதி மன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது கடந்த 12 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மீண்டும் 12 ஆம் திகதி நீதி மன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்ட போது எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த விமான படை அதிகாரிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!

மாத்தறையில் 10 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் முன்னாள் விமான படை அதிகாரி உட்பட்ட 5 பேரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாத்தறை மேலதிக நீதிவான் துலினி அமரசிங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
30 வயதான புத்திக நுவன்குமார என்ற முன்னாள் விமானப்படை அதிகாரி உட்பட்ட 8 பேர் கடந்த 3 ஆம் திகதி குறித்த சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதில் மூவர் ஒரு லட்சம் ரூபா பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
குறித்த சிறுமி இரண்டாம் தவணை பாடசாலை விடுமுறை செப்டம்பர் 5 ஆம் திகதி முடிவடைவதை முன்னிட்டு பாடசாலையை சுத்தம் செய்ய தமது தாய் மற்றும் சகோதரியுடன் பாடசாலைக்கு வந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

No comments:
Post a Comment