ஐக்கிய தேசியக்கட்சியின் அதே பாணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உலக அரங்கில் இலங்கை அரசாங்கத்திற்கெதிராக பிரசாரம் செய்து வருகின்றது:அரசியலுக்காக காட்டிக் கொடுக்கும் ஈனச் செயல்!
Sunday, September 11, 2011நாட்டில் அமைதியில்லை என்று காட்டி அரசியல் இலாபமடைவது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் குறிக்கோளாக உள்ளது. அதேபோன்று வடக்கு கிழக்கில் அமைதியில்லை என்று காட்டி இலாப மடைவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீவிரமாக உள்ளது. இவை இரண்டுமே அரசாங்கத்தின் மீது பழியைச் சுமத்தி மக்களைத் தமது பக்கம் இழுப்பதற்காகச் செய்துவரும் இந்த முயற்சிக்கு சில ஊடகங்களும் பக்க துணையாக இருந்து செயற்பட்டு வருவது பாமர மக்களுக்குக் கூடத் தெரிந்த விடயமாக உள்ளது.
பொதுவாக ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்தின் மீது எதிர்க்கட்சிகள் அதிருப்தி தெரி விப்பதும், பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதும் சாதாரணமான நடை முறை விடயங்களாகும். எதிர்க் கட்சியினரது இவ்வாறான பொய்யான பிரசாரங் களுக்கே ஊடகங்களும் முக்கியத்துவம் அளித்தும் வருகின்றன. இது உலக நாடு கள் எல்லாவற்றிலுமே வழமையாகக் காணப்படும் ஒன்று. காரணம் கேட்டால் மக் களுக்காகக் குரல் கொடுக்கின்றோம் என ஒரு வசனத்தில் கூறிவிடுவார்கள். அத ற்கு இலங்கை ஒன்றும் விதிவிலக்கல்ல.
ஆனால் சகல நாடுகளிலுமே தமது நாட்டின் இறைமைக்கும், பாதுகாப்பிற்கும் வெளித் தரப்பு ஒன்றினால் குந்தகம் ஏற்படுகின்றது எனக் கண்டறியப்பட்டால் உடனடியா கவே எதிர்க்கட்சிகள் யாவும் அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து ஓரணியில் செயற் படுகின்றன. எனினும் இவ்விடயத்தில் மட்டும் இலங்கை விதிவிலக்காகவே தொட ர்ந்தும் இருந்து வருகின்றமை கவலைதரும் விடயமாக உள்ளது. உலக நாடுகளு க்கு முற்றிலும் மாறாகத் தமது நாட்டைக் காட்டிக் கொடுப்பதில் எமது நாட்டு எதிரணிகள் தீவிரமாக உள்ளன. இப்போக்கு மிகவும் பாரதூரமான விடயமாகும்.
இன்று ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக நாம் செய்யும் குறும்புத்தனம் நாளை உலகில் எமது நாட்டைத் தலைகுனிய மட்டுமல்ல அந்நியப்படுத்தியும் விடுவதாக அமை ந்துவிடும். அதனையறியாது சிறுபிள்ளைத்தனமாகச் சிலர் தமது அரசியல் அபிலாஷைகளுக்காக நாட்டைக் காட்டிக்கொடுத்து வருகின்றனர். இன்று ஆட்சி யைக் கைப்பற்ற நினைப்பது ஒன்றே ஐக்கிய தேசியக் கட்சியின் மனதில் உள்ள ஒரு விடயமாக உள்ளது. அதனால்தான் அவர்களிடையே காணப்படுகின்ற உட் கட்சிச் சவாலைக்கூட வெளியே பெரிதாகக் காட்டிக் கொள்ளாமல் நாட்டைக் காட் டிக் கொடுக்கத் துணிந்துவிட்டார்கள்.
தான் மடிவதற்குள் ஜனாதிபதியாகிவிட வேண்டும் என்பது ரணில் விக்கிரமசிங்கவின் கனவாக உள்ளது. சிறு வயதில் கட்சித் தலைவனாகி ஜனாதிபதி வேட்பாளராக வேண்டும் என்பது சஜித் பிரேமதாசவின் எண்ணமாக உள்ளது. இதற்காக காட்டிக் கொடுப்பு வேலைகளில் இருவரது அணியினரும் தீவிரமாகச் செயற்படுகின்றனர். தமது கட்சியின் உட்பூசலைப் பெரிதாகக் காட்டிக் கொள்ளத் தயக்கம் காட்டும் இவர்கள் உலக நாடுகளில் தமது நாட்டைக் காட்டிக் கொடுப்பதில் தயக்கம் காட் டுவதில்லை. இதுவே இன்று நமது நாட்டின் சாபக்கேடாக உள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியின் அதே பாணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உலக அரங்கில் இலங்கை அரசாங்கத்திற்கெதிராக பிரசாரம் செய்து வருகின்றது. இவ் விரு தரப்பினரும் தமது பிரசாரம் உலக அரங்கில் எமது ஜனாதிபதிக்கும், அவ ரது தலைமையிலான அரசாங்கத்திற்கும் அபகீர்த்தி ஏற்படுத்தி வருவதாக நினை த்தே இவ்வாறான தரக்குறைவான செயலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அதில் எவ்விதமான உண்மையும் கிடையாது. மாறாக இவர்களது செய்கையால் எமது நாட்டின் நற்பெயர் உலக அரங்கில் களங்கப்படுத்தப்படுகின்றது என்பதை இவர்கள் உணரவில்லை. இது நாளைய எதிர்காலத்திற்கு எத்தகைய பாதிப்பை ஏற் படுத்தும் என்பதை இவர்களால் ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை.
ஒரு தரப்பு நாட்டை ஆளவும், மறுதரப்பு வடக்கு கிழக்கை ஆளவும் வேண்டும் என் பதற்காக நாட்டைக் காட்டிக் கொடுத்துச் செயற்படுகின்றன. இதற்கு சில சிங்கள, தமிழ் ஊடகங்களும் துணை போகின்றன. இந்நிலை மாற்றப்பட வேண்டும். ஒவ் வொருவரும் தமது மனங்களில் நாட்டுப் பற்றை வளர்க்க வேண்டும். அது தானாக உருவாக வேண்டும். மக்கள் மனங்களிலிருந்து நாட்டுப் பற்றை இல்லா தொழிக்கும் ஈனச் செயலில் எதிர்க் கட்சிகள் ஈடுபடக் கூடாது. அது பெற்ற தாய்க் குச் செய்யும் துரோகத்திற்குச் சமனானது.
இனிமேலோவது எதிர்க்கட்சிகள், அரசாங்கத்துடன் முரண்பாடு ஏதாவது ஏற்பட்டால் அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண முனைய வேண்டும். இதனை விடுத்து உள்நாட்டு சகோதர பிணக்குகளை வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்வ தைத் தவிர்க்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்த வரையில் முதலில் அரசாங்கத்திற்கு வீரியம் காட்டுவதற்கு முன்னதாக உங்களுக்குள் ஒரு ஒற் றுமையை ஏற்படுத்திக் கொண்டு அரசுடன் பேசித் தீர்வு காண முயலுங்கள்.
வெளிநாடுகளுக்குச் சென்று எமது நாட்டை விற்பதற்காக மட்டும் உங்களிடையே காணப்படும் ஒற்றுமையை தமிழர் பிரச்சினையை உள்நாட்டிலேயே தீர்ப்பதற்கும் காட்டுங்கள். அரசியல் இலாபத்திற்காக பிற நாட்டவரிடம் சரணடைவதை இலங் கையர் எனும் அடிப்படையில் எதிர்க்கட்சிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இது பெற்றதாயுடன் ஏற்பட்ட சிறு பிரச்சினைக்காக வளர்ப்பு ஆயாவை அம்மா எனக் கூப்பிட முனையும் செயலுக்கு ஒப்பாகவே அமைந்துவிடும். பல உலக நாடுகள் எமது நாட்டைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கும் கனவில் உள்ளன. அதற்கு நாம் துணைபோபவர்களாக ஒருபோதும் இருந்துவிடக் கூடாது.
No comments:
Post a Comment