Sunday, September 11, 2011இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயற்சித்த சுமார் 40 இலங்கையர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படைத் தளபதியான வைஸ் அட்மிரல் டீ.டபிள்யூ.ஏ.எஸ் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.நீர்கொழும்பிலிருந்து சுமார் 40 பேருடன் சென்று கொண்டிருந்த படகு ஒன்றினை இலங்கைக் கடற்பரப்பில் வைத்துக் கடற்படையினர் தடுத்தி நிறுத்தி விசாரணை செய்த போதே இவர்கள் அனைவரும் சட்டவிரோதமான முறையில் அவுஸதிரேவியாவுக்குச் செல்ல முயற்சித்தனர் என்பது தெரிய வந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, மேலதிக விசாரணைக்காக இவர்கள் அனைவரும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வருகிறது. உள்ளுர் முகவர் ஒருவருக்குப் பெருந்தொகைப் பணத்தை வழங்கியே தாம் அவுஸதிரேலியாவுகுச் செல்லவிருந்தோம் என கைது செய்யப்பட்டோர் தெரிவித்துள்ளனர்.
இவர்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்த குறிப்பிட்ட முகவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment