Sunday, September 11, 2011சந்திரிகா அண்மையில் மேற்குலக நாடுகளின் தூதுவர்களை சந்தித்தார்-விமல் வீரவங்சவின் இணையத்தளம் வெளியிட்டுள்ளது?
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க அண்மையில் மேற்குலக நாடுகளின் தூதுவர்களை ரகிசயமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அமைச்சர் விமல் வீரவங்சவின் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தை அத்தனகல்லவில் உள்ள சந்திரிகாவின் வீட்டில் நடைபெற்றுள்ளதுடன் இதில், அமெரிக்கா, பிரித்தானியா, நோர்வே போன்ற நாடுகளின் தூதுவர்களும், அதிகாரிகளும் கலந்துக்கொண்டுள்ளனர்.
அங்கு பேசப்பட்ட விடயங்கள் என்ன என்பது பற்றி எந்த தகவல்களும் வெளியாகவில்லை. வேறு நாட்களின் பார்க்க அதிக பாதுகாப்புக்கு மத்தியில் இந்த ரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment