Sunday, September 11, 2011இலங்கை மீனவர்கள் தாக்கி சுட்டுக் கொல்கின்றனர்:தமிழக மீனவர்களுக்கு கைத்துப்பாக்கி சட்டசபையில் கோரிக்கை!
சென்னை:""மீனவர்களுக்கு கைத் துப்பாக்கி வழங்க வேண்டும்'' என, சட்டசபையில் கோரிக்கை வைக்கப்பட்டது.
சட்டசபையில், நேற்று நடந்த மீன்வளத் துறை மானியக் கோரிக்கை விவாதம்:
பிரின்ஸ்- காங்: கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைத்தால், மாவட்டம் வளர்ச்சி பெறும்.
அமைச்சர் செங்கோட்டையன்: விமான நிலையம் அமைப்பது மத்திய அரசு தான். மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசைக் கேட்டால் கிடைக்காது என்று, கேட்டால் கிடைக்கும் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி என்பதால், உறுப்பினர் கோரிக்கை வைத்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி: கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்படும்.
மகாலிங்கம்-மா.கம்யூ: சுற்றுச் சூழலை மாசுபடுத்தும், இறால் பண்ணைகளை மூட வேண்டும். கடல் மற்றும் கடற்கரைக்குச் சொந்தக்காரர்களான மீனவர்களை, பாதுகாப்பு என்ற பெயரில், அவர்களை அகற்றக் கூடாது. இதனால், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
ராமச்சந்திரன்- இ.கம்யூ: தமிழக மீனவர்களை, இலங்கை மீனவர்கள் தாக்கி, சுட்டுக் கொல்கின்றனர். படகுகளை சேதமாக்குகின்றனர். எனவே, தமிழக மீனவர்களுக்கு கைத் துப்பாக்கி வழங்க வேண்டும்.
ஜவாஹிருல்லா-ம.ம.க: கடல் அட்டைகளை சமூக விரோதிகள் பிடித்து, வெளிநாடுகளுக்கு கடத்துகின்றனர். இவற்றை தடுத்து நிறுத்த வேண்டும்.இவ்வாறு, விவாதம் நடந்தது.
No comments:
Post a Comment