Monday, September 26, 2011பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் புதிய சரத்துக்கள் இணைக்கப்படக் கூடாது என மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.
அவசரகாலச் சட்டத்தை இல்லாதொழித்து, அதன் அம்சங்களை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அமுல்படுத்துவது ஏற்புடையதல்ல என மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அவசரகாலச் சட்டம் நீக்கப்படுவதாக ஜனாதிபதி பாராளுமன்றில் அறிவித்து ஒரு வார காலத்திற்குள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் புதிய சரத்துக்களை இணைக்க எடுக்கும் முனைப்புக்கள் தவறானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதன் மூலம் நாடு சாதாரண சட்டங்களின் கீழ் ஜனநாயக நெறிமுறைகளுக்கு அமைய ஆட்சி செய்யப்படும் என மக்கள் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் புதிய சரத்துக்கள் இணைக்கப்படுவது குறித்து சிவில் அமைப்புக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவசரகாலச் சட்டம் நீக்கப்படுவதன் மூலம் சிறுபான்மை மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படக் கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பாக வடக்கு கிழக்கு வாழ் மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தக் கூடிய பின்னணி உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் விசேட சரத்துக்கள், அவசரகாலச் சட்டம் நீக்கப்படுவதற்கு முன்னதாகவே அறிமுகம் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment