Monday, September 26, 2011

இலங்கை–இந்திய கடற்படையின் கடற்போர் ஒத்திகை மூலம் புரிந்துணர்வு ஏற்பட்டது – அசோக் கே.காந்தா!

Monday, September 26, 2011
இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கிடையிலான உறவு மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது. பிராந்தியத்தில் இலங்கையின் அபிவிருத்தி குறித்த உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்க காத்திருக்கின்றது. இதன் ஒரு கட்டமாகவே திருகோணமலை, சம்பூர் அனல் மின்நிலைய திட்டத்திற்கு இந்தியா ஏழு மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியாக வழங்கியுள்ளது’ என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா தெரிவித்தார்.
கடந்த மூன்று நாட்களாக இலங்கை மற்றும் இந்திய கடற்படையினரின் கடற்போர் ஒத்திகை நிகழ்வுகளை திருகோணமலையில் நடத்தியதன் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு தொடர்பிலான புரிந்துணர்வை வலுப்படுத்த விரும்பியுள்ளோம்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய அரசினால் வழங்கப்பட்ட 1200 கணினித்தொகுதிகளை கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை திருகோணமலை, உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ரூபா எழுபது மில்லியன் பெறுமதியான கணினித் தொகுதிகள் வழங்கப்பட்டதுடன் திருகோணமலை, கோணேசர்புரி பகுதியில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் சித்த ஆயுள்வேத கற்கை பிரிவிற்கு ரூபா 1 மில்லியன் பெறுமதியான ஆயர்வேத மருந்து வகைகளும் கையளிக்கப்பட்டன.

இதனையடுத்து அனைவர் மத்தியிலும் உரையாடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment