Monday, September 26, 2011கொழும்பில் இருந்து இந்தியாவின் தூத்துக்குடிக்கு சேவையில் ஈடுப்பட்டு வந்த ஸ்கோஷியா பிரின்ஸ் பயணிகள் கப்பல் தற்காலிகமாக வையை இடை நிறுத்தியுள்ளது.
வர்தக கப்பல் பணிப்பாளர் ஷாந்த வீரகோண் எமது செய்தி பிரிவுக்கு இதனை தெரிவித்தார்.
கடந்த வாரம் இந்த கப்பலில் இயந்திர அறையில் ஏற்ப்பட்ட தீ பரவல் காரணமாகவே, இந்த கப்பல் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்திய - இலங்கைக்கு இடையிலாக இந்த பயணிகள் கப்பல் சேவையானது, 30 வருடங்களின் பின்னர் இந்த வருடம் ஜூன் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், குறித்த கப்பல் சேவையை மீள ஆரம்பிக்க விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ஷாந்த வீரகோண் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment