Monday, September 26, 2011

பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 100க்கும் மேற்பட்ட புலி உறுப்பினர்கள் சுவிட்சர்லாந்தில் தஞ்சமடைந்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது

Monday, September 26, 2011
பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 100க்கும் மேற்பட்ட புலி உறுப்பினர்கள் சுவிட்சர்லாந்தில் தஞ்சமடைந்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளுடன் குறித்த நபர்களுக்கு தொடர்பு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இது தொடர்பில் சுவிட்சர்லாந்து சட்ட மா அதிபர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

பிறவுன்பெர்க் மற்றும் சூரிச் ஆகிய நகரங்களில் புலி உறுப்பினர்கள் செறிந்திருப்பதாக எதிர் தமிழ்த் தரப்புக்கள் தகவல் வழங்கியுள்ளன.

இவர்களில் பலர் வேறு நாடுகளின் ஊடாக சுவிட்சர்லாந்திற்குள் பிரவேசித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சுவிட்சர்லாந்துக்கான இலங்கைப் பிரதித் தூதுவர் ஜகத் டயஸ் திரும்பிவந்தால் அவர் மீது சுவிஸில் போர்க்குற்ற விசாரணை நடாத்தப்படுமென அந்நாட்டு சட்ட மா அதிபர் அறிவித்திருந்ததாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போர்க் குற்றச் செயல்களின் அடிப்படையில் ஜகத் டயஸிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மேஜர் ஜெனரல் ஜகத் டயஸிற்கு எதிராக விசாரணை நடத்த முடியாது என சுவிஸ் சட்ட மா அதிபர் அறிவித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

விசாரணைகள் நடத்தப்பட மாட்டாது எனத் தெரிவித்து ஐந்து பக்க ஆவணமொன்றை சட்ட மா அதிபர், இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

போர்க்குற்றவாளியாக தெரிவிக்கப்படும் ஜகத் டயஸ் உயர் இராணுவப் பயிற்சி ஒன்றைத் தொடர்வதற்காக விரைவில் சீனாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

No comments:

Post a Comment