Monday, September 26, 2011யுத்தத்தில் பாதிப்புக்களை எதிர்நோக்கிய அப்பாவி தமிழ் மக்களுக்கு புலிகளின் கிழக்குத் தளபதி கேணல் ரமேஷின் மனைவி நட்டஈடு வழங்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கணவர் கேணல் ரமேஸ் மற்றும் சகோதரரும், புலிகளின் கடற்படைத் தளபதியுமான சூசை ஆகியோரினால் தமிழ் மக்களுக்கு நேர்ந்த அநீதிகளுக்கு வத்சலாதேவி நட்டஈடு வழங்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரமேஷின் மனைவி, சவேந்திர சில்வாவிற்கு எதிராக அமெரிக்க மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி புலிகளின் குற்றச் செயல்களை உலகிற்கு அம்பலப்படுத்தப் போவதாக சவேந்திர குறிப்பிட்டுள்ளார்.
அப்பாவி பொதுமக்களை புலிகளின் பிடியிலிருந்து மீட்ட படைவீரர்களையும், நாட்டின் கௌரவத்தையும் பாதுகாப்பதற்கு தாம் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பல்வேறு தரவுகளை திரட்டியுள்ளதாகவும் அவற்றை வெளிப்படுத்தப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். வத்சலாதேவி தற்போது தென் ஆபிரிக்காவில் அடைக்கலம் புகுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பணம் சம்பாதிக்கும் நோக்கில் தமக்கு எதிராக வத்சலா வழக்குத் தொடர்ந்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். நட்ட ஈடு வழங்குமாறு வத்சலா நீதிமன்றில் கோரியுள்ளமை நகைப்புக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment