Friday, September 30, 2011

சவேந்திர சில்வாவிற்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு குறித்து கருத்து வெளியிட முடியாது-அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது!

Friday, September 30, 2011
ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் பிரதி நிரந்தரப் பிரதிநிதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு குறித்து கருத்து வெளியிட முடியாது என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த வழக்கு விசாரணை தொடர்பில் ஊடகவியலாளர்கள் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்டோரியா நூலாண்டிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அமெரிக்க மாவட்ட நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது இதனால் கருத்து வெளியிட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டச் சிக்கல்கள் காணப்படுவதனால் குறித்த கேள்விக்கு பேச்சாளர் நூலாண்ட் பதிலளிக்கவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு இராணுவத் தளபதி கேணல் ரமேஷின் மனைவி வத்சலாதேவியினால், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இதேவேளை, சவேந்திரா சில்வா இராஜதந்திர வரப்பிரசாதங்களினால் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment